மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

ஒரு ஹோம் லோன் 10 லட்சம் போட அவ்வளவு பார்மாலிடீஸ், பிராசசிங் பீஸ், செக்யூரிட்டி, சேலரி ஸ்லிப், பேங்க் ஸ்டேட்மெண்ட், மாசம் மாசம் EMI இது போக அதுக்கு அதிகமான வட்டி. இதுதான் இப்போதைய நடைமுறை.

எங்க ஊர் கிராமங்களில் என்ன செய்வாங்கன்னா... வீட்ல இருக்க ஒரு குழந்தைக்கு கிடா வெட்டி காது குத்து வைப்பாங்க. சொந்தக்காரனுங்க ஆயிரம் குடும்பம் இருந்தா போதும்.

நாம/நம்ம முன்னோர்கள் செஞ்சத ஆயிரம் குடும்பங்கள் 500, 1000, 2000 ரூபாய் திரும்ப மொய் வைப்பாங்க. 10 லட்சம் ஈசியா வந்துரும். அந்த காசை வெச்சு புது வீடு கட்ட ஆரமிப்பாங்க.

இந்த மொய் பணத்துக்கு உறவு மட்டும்தான் செக்யூரிட்டி. சாப்பாடு, பந்தல், தோடு செலவு தான் பிராசசிங் பீஸ். குழந்தையோட காதுதான் பாண்ட் பேப்பர். மொய் நோட்டுதான் EMI சார்ட்.

இந்த தொகையை மாசம் மாசம் EMI கட்டணும்னு இல்ல. அவரவர் வீட்டில் விசேஷம் வரும்போது அவர் செஞ்சத கட்டுனா போதும். அதிகம் சேர்த்து கட்டுனா நாளைக்கு நம்ம பேத்திக்குக் காது குத்து வெச்சு, நம்ம பையன் வீடு கட்ட உதவும்.

பேங்க்ல லோன் வாங்கிட்டு நின்னா நாம கடன்காரன் ஆகுறோம். ஆயிரம் பேர் சேர்ந்து மாறி மாறி உதவும்போது நாம சொந்தக்காரனா ஆகுறோம்.

உங்களிடம் நல்ல சொந்தங்களும், சரியான கண்ணியமும் இருந்தா தமிழர் வாழ்க்கை முறைய விட மிகச்சிறந்த பேங்கிங் சிஸ்டம் உலகத்தில் எங்கும் இல்ல.

கேட்க நல்லாதான் இருக்கு. ஆனா இன்றைய காலகட்டத்தை கொஞ்சம் யோசிக்க வேண்டியதா இருக்கு. நமக்கு மிகச்சரியான ஆப்பு வைப்பதே சொந்தக்காரர்கள்தான்.

சமூக வலைதளங்களிலேயே சொந்தக்காரர்கள் இல்லாம பார்த்துக்கிற கவனக்காரர்களும் உண்டு.

கல்யாணம் போன்ற நிகழ்வுகளுக்குச் சமயம் பார்த்து வெளியூருக்கு எஸ்கேப் ஆகிட்டு “சாரிங்க.. ஃபங்க்ஷனுக்கு வர முடியல.. வெளியூர்ல இருந்தேன்” அப்படின்னு சொல்ற ஆளுங்க பெருகிட்டாங்க. அப்பறம் எப்படி நாம குடுத்த ஆயிரம் ரூவா மொய்யைத் திரும்ப வாங்குறது. ஆனா இதெல்லாம் நகர்ப்புறங்களுக்கு மட்டுமே. கிராமப்புறங்களில் இன்றும் மொய் நோட்டுகள் எல்லாம் பராமரிக்கப்படுது. என்ன கொஞ்சம் டெவலப் ஆகி மெயில்ல போட்டு, ட்ராப்ட்ல வெச்சிருக்கலாம். இல்ல எக்ஸல் ஷீட் வெச்சிருக்கலாம். அவ்வளவுதான்.

நல்லவேளை இந்த மாசம் என்ன கல்யாணம், காது குத்துல்லாம் இருக்குன்னு லிஸ்ட் எடுக்கணும். ஞாபகத்துக்கு வந்துச்சு.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

புதன் 3 ஜன 2018