மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

குறும்படத்தில் அதுல்யா

குறும்படத்தில் அதுல்யா

குறும்படத்திலிருந்து வாய்ப்பு தேடி வெள்ளித் திரை நோக்கிச் செல்பவர்களுக்கு மத்தியில் வெள்ளித் திரையில் கவனம்பெற்ற அதுல்யா குறும்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

காதல் கதைகளை விரல்விட்டு எண்ணும்போது அதில் தேவதாஸ் - பார்வதி இருவரின் காதல் கதைக்கும் முக்கிய இடமுண்டு. அந்தக் கதையை அப்படியே சினிமாவாக எடுத்தும், அக்கதையைத் தழுவி மறைமுகமாக பல படங்களில் பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளனர். சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் தேவதாஸ் கதையை இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு திரைக்கதையில் பல புதுமைகளைச் செய்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றனர். தற்போது அந்தக் காதலர்களின் கதையைக் குறும்படமாக எடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.

காதல் கண்கட்டுதே, ஏமாலி, சுட்டுப்பிடிக்க உத்தரவு ஆகிய படங்களின் நாயகியான அதுல்யா, பார்வதியாக நடிக்க ‘தேவதாஸ் பார்வதி’ என்ற பெயரில் மியூசிக்கல் குறும்படத்தை உருவாக்க உள்ளனர். இதில் தேவதாஸாக நடிகர் லோகு நடிக்கிறார். வீர சிவாஜியில் தவழ்ந்திடும் தங்கப்பூவே பாடல் மற்றும் இணை இயக்குநராகப் பல படங்களில் பணிபுரிந்த அரவி இதில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 3 ஜன 2018