மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா

கிச்சன் கீர்த்தனா

காய்கறிகள் மட்டுமே பிரதானம் என்ற நிலை மாறி, காய்கறிகள் என்றாலே வேண்டா வெறுப்பாக காலமும் மாறி... தற்போது வறுத்த, பொரித்த பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் தவிர்த்து மீண்டும் காய்கறிக்கே திரும்பிவிட்டோம்.

கிராமப்புறங்களில் கிடைக்கும் காய்கறியின் சுவையே அலாதியானது. காரணம், இயற்கை உரங்கள்.

வீட்டில் மீதியிருக்கும் காய்கறி தோல்கள்கூட உரமாகும். எந்தவித பக்க விளைவுகளும் இருக்காது.

ஆனால், இன்று நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் காய்கறிளை வாங்கவே பயந்து, அதன் நன்மைகளை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்குகளில் பகிர்வதோடு சரி.

அவ்வப்போது வெளியில் செல்கையில் அதிக காய்கறிகளை வாங்குவோம். தெருமுனையில் விற்கும் பாட்டியிடம் பேரம் பேசாமல் வாங்குவதே அவர்களுக்கும் மகிழ்ச்சியைத்தரும்.

நாமும் மகிழ்சியாய் பல காய்கறி மெனுக்களை அவ்வப்போது பிறருக்கும் செய்து கொடுப்போம். இன்றைய ஸ்பெஷல் மிக்ஸ்டு வெஜிடபிள் கூட்டு.

தேவையானவை: நறுக்கிய கேரட், பீன்ஸ், அவரைக்காய், புடலங்காய் சேர்ந்த கலவை – கால் கிலோ, கடுகு, சீரகம், தனியா – தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் – தலா 3, தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளை உப்புப் போட்டு வேக வைக்கவும். தனியா, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெந்த காய்கறிகளில் அரைத்த விழுதைக் கொட்டி, நன்றாகக் கொதித்ததும் சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், இஞ்சி தாளித்துக் கொட்டி இறக்கவும்.

கீர்த்தனா சிந்தனைகள்:

அமைதியாக இருப்பதால் என்னை

ஊமை என்று நினைக்காதே!

நீ நடந்துவரும் அழகைக் கண்டு

வாயடைத்துப் போய் நிற்கிறேன்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 3 ஜன 2018