மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

இதயத்தைப் பையில் சுமந்துகொண்டு உயிர் வாழும் பெண்!

இதயத்தைப் பையில் சுமந்துகொண்டு உயிர் வாழும் பெண்!

பிரிட்டனில் செயற்கை இதயத்தைப் பையில் சுமந்துகொண்டு பெண் ஒருவர் உயிர் வாழ்வது மக்கள் அனைவரிடத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்தவர் செல்வா ஹுசைன் என்ற பெண். இந்தப் பெண்ணின் இதயம் செயலிழந்து விட்டது. இதனால் இந்தப் பெண் பிரிட்டனில் உள்ள ஹரிபீல்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அம்மருத்துவமனையில் இதய அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

இதயம் முழுவதுமாக செயலிழந்துவிட்டதால் மாற்று அறுவைசிகிச்சை மூலமாக ஹுசைனுக்குச் செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. இரண்டு பெரிய பிளாஸ்டிக் டியூப்கள் அவரது இதயத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இதையடுத்து அதனோடு பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் மூலம் இதயம் இயக்கப்படும். இந்தக் கருவியின் மொத்த மதிப்பு 73 லட்சமாகும்.

இயக்கப்படும் கருவியை ஹுசைன் தனது முதுகில் மாட்டிக் கொண்டுள்ளார். ஹுசைன் எங்குச் சென்றாலும் அந்தப் பையை எடுத்துக் கொண்டுதான் செல்வார். அவர் கூறுகையில், “எனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாட உதவிய ஹரிபீல்ட் மருத்துவமனைக்கு நன்றி. நான் உயிருடன் வாழ ஒரு தீர்வை உருவாக்கியது மிகச் சிறப்பானதாகும்” என்று மகிழ்ச்சியாகக் கூறினார்.

இதயத்தைப் பையில் சுமந்துகொண்டு ஹுசைன் உயிர் வாழ்வது பொதுமக்கள் அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 3 ஜன 2018