மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

நினைவு இல்லமாகும் எம்.ஜி.ஆர் வீடு!

நினைவு இல்லமாகும் எம்.ஜி.ஆர் வீடு!

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் கேரளாவில் உள்ள வீட்டை, நினைவு இல்லமாக மாற்றும் முயற்சி தற்போது நடைபெற்றுவருகிறது.

கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆரின் 70 ஆண்டுகள் பழைமையான பூர்வீக வீட்டை, எம்.ஜி.ஆர் நினைவு இல்லமாக மாற்றும் முயற்சியைச் சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி ரூ.10 லட்சம் நன்கொடை கொடுத்துத் தொடங்கியுள்ளார். இதையடுத்து அந்த வீட்டின் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மரக்கட்டைகளால் ஆன அந்த வீட்டின் கூரையை மாற்றி, சுவர்கள் பூசப்பட்டு, கூரை ஓடுகள் மாற்றியமைக்கப்பட உள்ளது. இத்துடன் அந்த வீட்டினுள் எம்.ஜி.ஆரின் சிலை அமைக்கப்படவுள்ளது. மேலும் அவரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகங்கள் மற்றும் புகைப்படங்களுடன் கூடிய மையமும் அமைக்கப்படவுள்ளது. எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த படங்களைத் திரையிடச் சிறு திரையரங்கும் உருவாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடவூரில், இந்த வீட்டில் எம்.ஜி.ஆர் சிறுவயதில் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமாவின் பூர்வீக வீடாகும். சிறு வயதில் இந்த வீட்டில் வாழ்ந்துவந்த எம்.ஜி.ஆர், தந்தையின் மரணத்துக்குப் பிறகு தாயார் மற்றும் சகோதரருடன் கும்பகோணத்தில் குடியேறியதாகக் கூறப்படுகிறது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 3 ஜன 2018