மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

எல்.ஜி நிறுவனத்தின் 8K தொலைக்காட்சி!

எல்.ஜி நிறுவனத்தின் 8K தொலைக்காட்சி!

எல்.ஜி நிறுவனம் புதிய 8K வசதி கொண்ட தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகஸ் நகரில் நடைபெற்றுவரும் CES (Consumer Electronics Show) என்ற கண்காட்சி மூலம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் புதிய படைப்புகளை அறிமுகம் செய்துவருகின்றன. அதில் எல்.ஜி நிறுவனம் புதிதாக 8K Resolution கொண்ட புதிய தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு முன்னதாக 4K தொலைக்காட்சியைப் பல நிறுவனங்கள் வெளியிட்டு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. துல்லியமான வீடியோக்களைக் காண இவை உதவியாக இருந்தன. 77 இன்ச் திரையளவுடன் 4K தொலைக்காட்சிகள் வெளியாகின. தற்போது 88 இன்ச் திரையளவுடன் 8K தொலைக்காட்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நான்கு மடங்கு துல்லியமான வீடியோக்களை இதில் காண இயலும் எனவும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த மாதம் ஒன்பதாம் தேதி புதிய மாடலை வெளியிட எல்.ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 3 ஜன 2018