மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

நட்சத்திரக் கலை விழாவைக் குறிவைக்கும் படங்கள்!

நட்சத்திரக் கலை விழாவைக் குறிவைக்கும் படங்கள்!

ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள நட்சத்திரக் கலை விழாதான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்.

நடிகர்கள் சங்கத்தின் கட்டட நிதிக்காக விரைவில் நட்சத்திரக் கலை விழா ஒன்று திட்டமிடப்படும் என்று நடிகர்கள் சங்கப் பொதுக்குழுவின் முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் நட்சத்திரக் கலை விழா நடைபெறவுள்ளது. இதில் திரையுலகினர் பெருவாரியாக கலந்துகொள்வதற்கு வசதியாக நடிகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் தயாரிப்பாளர்கள் சங்கம் ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் படப்பிடிப்பை ரத்து செய்வதாக அறிவித்தது.

ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பின்னர் கமலை இன்னும் நேரில் சந்திக்காத நிலையில் கலை விழாவில் இருவரும் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த மீடியாவின் கவனமும் நட்சத்திரக் கலை விழாவை நோக்கி திரும்பும் வாய்ப்புள்ளதால் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களின் புரொமோஷனை அந்நிகழ்ச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி விஷால் நடிப்பில் உருவாகிவரும் இரும்புத்திரை படத்தின் இசை வெளியீட்டை அந்த நிகழ்ச்சியில் நடத்தவுள்ளதாக அறிவித்தனர். தற்போது விஷால் நடிக்கும் மற்றொரு படமான ‘சண்டகோழி 2’ன் டிரெய்லரும் அங்கு வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 3 ஜன 2018