மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

மது: 125 பேர் பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல்!

மது: 125 பேர் பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல்!

புத்தாண்டு இரவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 125 பேருக்கு பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

சமீப காலமாக சென்னையில் பைக் ரேஸ் அதிகரித்துள்ளது. இது இளைஞர்களின் உயிருக்கு உலை வைக்கிறது. மற்ற நாள்களை விடப் பண்டிகை காலங்களில் பைக் ரேஸ் அதிகளவு நடைபெறுகின்றன. இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இளைஞர்கள் யாரும் பைக் ரேஸில் ஈடுபடக் கூடாது, மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது என்பதற்காகச் சென்னை காவல் துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.

அவ்வாறு பைக் ரேஸ் அல்லது மது அருந்தி வாகனம் ஓட்டினால் பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. எனினும் புத்தாண்டு பிறப்பையொட்டி பலர் வாகனங்களில் சைலென்சர்களை திறந்துவிட்டு நள்ளிரவு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

அதுபோன்று, புத்தாண்டு அன்று போலீஸார் மேற்கொண்ட வாகன தணிக்கையில் 125 பேர் மது அருந்தி வாகனத்தை ஓட்டியது கண்டறியப்பட்டது. அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் ஏற்கெனவே எச்சரித்திருந்தபடி பாஸ்போர்ட் பெற தடையில்லாச் சான்று கொடுக்க மாட்டோம் என்று நேற்று (ஜனவரி 2) அறிவித்துள்ளனர். ஏற்கெனவே பாஸ்போர்ட் எடுத்திருந்தால் அதைப் புதுப்பிக்கும்போது தடையில்லாச் சான்று வழங்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

புதன் 3 ஜன 2018