மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

பென்டிரைவில் இருந்தது என்ன?

பென்டிரைவில் இருந்தது என்ன?

ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ ஆதாரங்கள் அடங்கிய பென் டிரைவை தினகரன் வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்து வந்தனர். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை ஆணையத்தின் முன்பு திமுகவைச் சார்ந்த மருத்துவர் சரவணன், அரசு தலைமை மருத்துவர் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவரது சகோதரர் தீபக், முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம்மோகன் ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கமளித்தனர்.

இந்நிலையில் தினகரனுக்கு பதிலாக விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜரான அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோக்கள் அடங்கிய பென் ட்ரைவை தாக்கல் செய்தார். அதை தாக்கல் செய்தபின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்திடமிருந்து கடந்த டிசம்பர் 26 தேதி தினகரனுக்கு அழைப்பாணை வந்தது. அந்த ஆணைப்படி ஏழு நாட்களுக்குள்ளாக விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோக்கள் அடங்கிய ஆதாரங்களை வழங்குமாறு தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் பென் ட்ரைவை விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்தோம். நீதிபதி ஆறுமுகசாமி அதை பார்த்து விட்டு பதிவு செய்து கொண்டார்" என்று கூறினார் .

மேலும் அந்த பென் ட்ரைவில் உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவசிகிச்சை எடுத்துக்கொண்ட வீடியோக்கள் அடங்கியுள்ளது என்றும் வெற்றிவேல் வெளியிட்ட வீடியோக்களை தாண்டி பல்வேறு சிகிச்சை வீடியோக்கள் அதில் அடங்கியுள்ளதாக செந்தூர் பாண்டியன் குறிப்பிட்டார். மேலும் கடந்த மாதம் டிசம்பர் 23 அன்று பெங்களுரு சிறையில் இருக்கும் வி.கே.சசிகலா அவர்களுக்கும் விசாரணை ஆணையத்திடமிருந்து 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. சசிகலா சார்பாக தான் ஆஜராகப் போவதாக வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் குறிப்பிட்டார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 2 ஜன 2018