மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

ஐ.பி.எல்: தோனியைத் தக்க வைத்த சென்னை!

ஐ.பி.எல்: தோனியைத் தக்க வைத்த சென்னை!

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் 11ஆவது ஐ.பி.எல் சீசனில் களமிறங்க உள்ள சென்னை அணி மகேந்திர சிங் தோனியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

2018ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகளுக்கான ஏலம் வருகிற 27, 28ஆம் தேதிகளில் பெங்களூரில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் 5 வீரர்களைத் தக்க வைத்துக்கொள்ளலாம். 3 வீரர்களை நேரடியாகவும், 2 வீரர்களை ‘மேட்ச்’ கார்டு சலுகையைப் பயன்படுத்தியும் பெற இயலும். தக்க வைத்துக்கொள்ளும் வீரர்கள் விவரத்தை வருகிற 4ஆம் தேதிக்குள் அணி நிர்வாகம் ஐ.பி.எல். அமைப்பிடம் சமர்பிக்க வேண்டும் என முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை அணி வெளியிட்ட தகவலில் தோனி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னாவைத் தக்க வைத்துக்கொள்வதாகச் சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிராவோவை மேட்ச் கார்ட் முறையில் பெற்றுக்கொள்வதாகவும் சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் மும்பை அணி ரோஹித் ஷர்மா, ஹார்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா ஆகியோரைத் தக்க வைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

செவ்வாய் 2 ஜன 2018