மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

புத்தாண்டில் பிறந்த குழந்தைகள்: இந்தியா முதலிடம்!

புத்தாண்டில் பிறந்த குழந்தைகள்: இந்தியா முதலிடம்!

புத்தாண்டு தினமான நேற்று (ஜனவரி 1) சர்வதேச அளவில் இந்தியாவில் அதிக அளவு புதிய குழந்தைகள் பிறந்துள்ளன என ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பு (யூனிசெப்) தெரிவித்துள்ளது.

இது குறித்து யூனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2018 புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3,86,000 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சி இல்லாத நாடுகளில்தான் அதிகஅளவு குழந்தைகள் பிறந்துள்ளன. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விட, இந்தியாவில் அதிகமாக 69,070 குழந்தைகள் பிறந்துள்ளன. சீனாவில் 44,760, நைஜீரியாவில் 20,210, பாகிஸ்தானில் 14,910, இந்தேனேஷியாவில் 13,370, அமெரிக்காவில் 11,280, காங்கோ நாட்டில் 9,400 எத்தியோபியாவில் 9,020, வங்கதேசத்தில் 8,370 குழந்தைகள் பிறந்துள்ளன. உலக நாடுகளில் பிறந்த மொத்த குழந்தைகளில் பாதி, இந்த 9 நாடுகளில் பிறந்துள்ளன. இவற்றில் பல குழந்தைகள் பிறந்த முதல் நாளிலேயே உயிரிழந்துள்ளன.

குழந்தைகளின் பிறப்பு அதிகரித்துவந்தாலும், குழந்தைகளின் இறப்பு விகிதமும் கவலையளிக்கிறது. 2016ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி, ஒரு நாளில் 2,600 குழந்தைகள் வீதம் இறந்துள்ளன. குறிப்பாகப் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. 2016ஆம் ஆண்டில், பிறந்த ஒரு மாதத்திலேயே இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 26 லட்சமாகும். இதில், 80 சதவீத குழந்தைகள், குறைப் பிரசவம், உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளன. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் இந்தக் குழந்தைகளைக் காப்பாற்றி இருக்க முடியும்" என்று யூனிசெப் தெரிவித்துள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 2 ஜன 2018