மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

மக்களின் ஆளுநர்: மாஃபா மழுப்பல்!

மக்களின் ஆளுநர்: மாஃபா மழுப்பல்!

தமிழக ஆளுநரை மக்களின் ஆளுநர் என அழைத்தது ஏன் என்ற கேள்விக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மழுப்பலான பதிலையே அளித்தார்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எம்ஜிஆர் சிலையைத் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எம்ஜிஆர் பாடலைப் பாடித் தனது பேச்சைத் தொடங்கினார். ஆளுநர் குறித்துப் பேசும்போது, அவரை மக்களின் ஆளுநர் என்று குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு அங்கிருந்தவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாநில சுயாட்சி உரிமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக ஆளுநர் ஆய்வு நடத்திவருகிறார் என்றும் தமிழக அரசு இதனைக் கண்டும் காணாததுபோல் உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் அமைச்சர் ஒருவரே ஆளுநரை மக்களின் ஆளுநர் என பாராட்டியுள்ளது அரசியல் வட்டத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பன்வாரிலாலை மக்களின் ஆளுநர் என அழைத்தது ஏன் என பாண்டியராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “தமிழ் பல்கலைக்கழகத்துக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார். மத்திய அரசின் உதவிகளைப் பெற்றுதருவதற்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெற்றுத் தருவதற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதன் காரணமாகதான் அவரை மக்களின் ஆளுநர் என அழைத்தேன்” என்று விளக்கமளித்தார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 2 ஜன 2018