மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

கமல் பாணியில் ஷாருக்

கமல் பாணியில் ஷாருக்

இந்திய சினிமாவுலகில் நடிப்பில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்ட ஷாருக் கான் அடுத்ததாகக் கமல் பாணியில் குள்ள மனிதர் வேடத்தில் களமிறங்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கமல் மூன்று வேடங்களில் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் மற்ற இரண்டு வேடங்களைவிட, குள்ள மனிதராக கமல் நடித்திருந்த அப்பு கேரக்டர்தான் திரையுலகினர் அனைவரையும் ஆச்சரியம் கொள்ளச் செய்தது. இன்றைய காலத்தில் கிராபிக்ஸ் மூலம் குள்ள மனிதராக மாற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால், 90களின் முற்பகுதியில் வந்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் குள்ள மனிதராக எப்படி நடித்தார் என்று கேள்வி எழுந்தது. படத்தின் ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பலரும் அந்த மர்மத்தை இன்றளவும் அவிழ்க்க மறுக்கிறார்கள். இந்த நிலையில் கமலின் அப்பு கேரக்டர் பாணியை ஷாருக் தற்போது ஜீரோ படத்தில் கையில் எடுத்துள்ளார். இதன் டீசர் வெளியாகி 45 லட்சம் பார்வைக்கு மேல் சென்றுள்ளது.

இதில் குள்ள மனிதராக ஷாருக் ஆடிப் பாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஷாருக்கின் தோற்றம் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டுள்ளது தெரிகிறது. ஆனந்த் எல் ராய் இப்படத்தை இயக்கிவருவதோடு ஷாருக்குடன் இணைந்து தயாரிக்கிறார். கத்ரீனா கைஃப், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை டிசம்பர் 21ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

ஜீரோ டீசர்

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 2 ஜன 2018