மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

புதிய ஜேம்ஸ் பாண்டு பிறக்கிறார்!

புதிய ஜேம்ஸ் பாண்டு பிறக்கிறார்!

நீண்ட காலமாகக் கேட்கப்பட்டு வந்த கேள்விக்கான பதில் கிடைத்திருக்கிறது. ஹாலிவுட்டில் இப்போதும் நிறபேதம் நிலவுகிறதா என்கிற கேள்விக்குப் பல பாரம்பர்யமான நிறுவனங்களும் திரைப்படங்களும் தங்களது பதில்களைச் செயல்களாகக் கொடுத்து வருகின்றன. ஆஸ்கர் விருது முதல் தற்போது நடைபெற்றிருக்கும் ஜேம்ஸ் பாண்டு திரைப்பட விவகாரம் வரை இதில் விதிவிலக்கு இல்லை.

ஹாலிவுட்டின் மிக நீண்ட வருட பிரச்னைகளான பெண்களுக்குச் சம வாய்ப்பு மற்றும் நிறபேதமற்ற தன்மை ஆகியவற்றில் தன்னை மாற்றிக்கொண்டே வருகிறது ஹாலிவுட். பெண்கள் சூப்பர் ஹீரோ ரோலில் நடிக்கக்கூடாதா என்ற கேள்வியை ‘வொண்டர் வுமன்’ வைத்துச் சமாளித்தது போல தற்போது ஜேம்ஸ் பாண்டு பிரச்னைக்கும் ஒரு முடிவு கிடைத்திருக்கிறது.

ஜேம்ஸ் பாண்டு படங்களைப் பொறுத்தவரையில் வெள்ளை நிற ஹீரோ மட்டுமே இதுவரையிலும் அந்த கேரக்டரில் நடித்துவருகிறார். இது மிகப்பெரிய சர்ச்சையாகி பெண்கள் அல்லது அமெரிக்க கறுப்பு ஹீரோக்களை இந்த கேரக்டரில் நடிக்க வைக்க மாட்டீர்களா என்ற கேள்வி ஒவ்வொருமுறை ஜேம்ஸ் பாண்டு படத்தின் அறிவிப்பு வெளியாகும்போதெல்லாம் எழுகிறது. ஆனால், இம்முறை அந்தச் சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்காமல் சிலவற்றை மாற்றியிருக்கிறார் ஜேம்ஸ் பாண்டு பட தயாரிப்பாளர் பார்பரா பிரக்கோலி.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 2 ஜன 2018