2017இல் 30 லட்சம் கார்கள் விற்பனை!

2017ஆம் ஆண்டில் 30 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச விற்பனையை இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
2016ஆம் ஆண்டில் 29 லட்சம் கார்கள் விற்பனையானதாகவும், 2017ஆம் ஆண்டில் 9.2 சதவிகித உயர்வுடன் 32 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளதாகவும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முதற்கட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து நிதி நெருக்கடியால் மக்களின் கார் வாங்கும் திறனில் தொய்வு ஏற்படும் என்று கருதப்பட்டது. ஆனால் சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை மாதத்தில் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக, அதன் மீதான எதிர்பார்ப்பாலும், நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்ததாலும், 2017ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த விற்பனை அதிகரித்துள்ளது.