மீம்ஸ்கள் ஜாக்கிரதை: அப்டேட்குமாரு

பள்ளிகூடத்துல படிக்கும் போது கணக்கு வாத்தியார் மேல உள்ள கோபத்தை நேர்ல காட்டமுடியாம பாத்ரூம் சுவத்துல அவர் படத்தை வரைஞ்சு வச்சு அசிங்க அசிங்கம்மா திட்றத பார்த்துருக்கீங்களா? இங்க பேஸ்புக், ட்விட்டர்லயும் அதான் நடக்குது. பிரபலங்கள் சொல்லாத விஷயங்களை சொல்லியதாக சில ஊடகங்கள் தான் செய்தி போடுறாங்கன்னு பார்த்தா அதை பத்தி என்ன ஏதுன்னே தெரியாம நெட்டிசன்ஸும் இஷ்டத்துக்கு பரப்ப ஆரம்பிச்சுடுறாங்க, பிரகாஷ் ராஜ் மேட்டரை வச்சு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து தமிழனா இல்லையான்னு பார்க்குற குரூப் வரிசையா மீம்ஸ் போட்டு தள்ளுறாங்க. அதை கூட விடுங்க, அதுக்கு போடுற கமெண்ட எல்லாம் படிச்சாலே எல்லா கெட்ட வார்த்தையையும் கத்துக்கலாம் போல. அதுனால மக்களே அந்த பக்கம் பார்த்து போங்க. உங்களுக்கு அந்த சிரமம் இருக்க கூடாதுன்னு அதை எல்லாம் பில்டர் பண்ணி அப்டேட் எடுத்துருக்கேன். கூலா பாருங்க.
@itzkarthik_v
ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சபாஷ் - H.ராஜா
நீங்க ஆதரிச்சாலே போதும்... மக்கள் எதிர்த்திடுவாங்க
@sethulogin
ரஜினி அரசியலுக்கும் பாஜக,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை - தமிழிசை #
மண்டைமேல் உள்ள கொண்டைய மறைக்கலியேக்கா மொமெண்ட்
@manipmp
ஜாதியையும்,ப்ளாஸ்டிக்கையும் அழிக்க முடியாது. பயன்படுத்துவதை
தவிர்க்கலாம்
@veeratalks
ரஜினி Fans Now : அதாவது பாத்தீங்கன்னா சார்... மோட்
@dharmaraaaj
பன்வாரிலால் புரோகித்தை மக்களின் ஆளுநர் என்று பாராட்டிய அமைச்சர் மஃபா.பாண்டியராஜன்
அடுத்தது என்ன அமித்ஷா மக்களின் புரட்சியாளரா அமைச்சரே
sahayarani
நான் அரசியலுக்கு வந்தால் பெரியார் வழியில் செல்வேன் - ரஜினி...
தலைவரே அது ரொம்ப சுத்து மாட்டுத்தாவனி வழியா போங்க...
@manipmp
லீவு கேட்பது கடன் கேட்பதை விட கொடுமையானது
@yugarajesh2
கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரை பெற்றுத்தர ரஜினி குரல் கொடுக்க வேண்டும்-விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
பேக்கரியை திறந்ததுமே பன்னுவேணும், வெண்ணை வேணும்னு உசுரை வாங்கிறீங்களேப்பா..?
@CreativeTwitz
ரஜினி அரசியலுக்கும் பாஜக,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை - தமிழிசை
// அதுலாம் நம்ப முடியாது தமிழ்நாட்ல நடக்குற அம்புட்டு கெட்டதுக்கும் காரணம் பாஜக தான்
@ItzDs
தன்னடக்கம் என்பது, பாராட்டும் போது கமுக்கமா இருக்குறது தான்.
அதைவிட்டுட்டு அப்படிலாம் இல்லைங்க, அய்யயோ இல்லைங்கன்றதுலாம் இன்னும் கொஞ்சம் பாராட்டுங்கன்னு சொல்லாம சொல்லுற வித்தை.
@manipmp
காலண்டரில் முதல் கலர் பேப்பரை கிழித்தவுடன், வாழ்க்கை எப்போதும்போல் கருப்பு வெள்ளைக்கு மாறிவிடுகிறது
@thoatta
ஒரு எலுமிச்சை 5 ரூவாய்க்கு விக்குது. ஆனா நூறு எலுமிச்சை சக்தி கொண்ட விளக்குற சோப்பு பத்து ரூபா தான்னு விக்கிறான், அதே லாஜிக் தான் ஆன்மிக அரசியலும்.
@senthilcp
ரஜினி ஒரு அதிர்ஷ்டக்காரர்.
எப்டி சொல்றே?
சினிமால ஷங்கர்
அரசியல்ல மோடி;
ஸ்பான்சர்க்கு ஆள் சிக்கிடுதில்ல?
@Mukamooodi
கெடா வெட்டி விருந்து வைக்க முடியாது, ஏன்னா மஹால் ரூல்ஸ் அப்படி...
ஆக தன்னோட மஹால் ரூல்ஸையே வாழ வைத்த தெய்வங்களான ரசிகர்களுக்காக மாத்த முடியல இதுல எப்படி மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசின் கொள்கைகளை எதிர்ப்பீங்க...
முதல்ல உங்க சிஸ்டத்தை சரி பண்ணிட்டு வாங்க ப்ரோ
@manipmp
கார் வாங்குவதற்கு பணக்காரனா இருக்கனும்னு அவசியம் இல்லை குழந்தையா இருந்தாலே போதும் !
@Muru Gesh
கர்நாடகவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என்று பிரகாஷ்ராஜ் கூறியதாக தந்தியில் செய்தி வந்திருந்தது. ஆங்கிலத்தில் தேடியபோது அப்பிடி அவர் பேசியதாக எங்கும் இல்லை.
சரி, வழக்கம்போல் தமிழ் ஊடகங்களின் Fake News என்று வேறு வேலைகள் பார்க்க போயாச்சி.
இன்னிக்கு ”பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானது. பிரகாஷ்ராஜ்ஜின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின” என்று செய்தி வெளியிட்டுள்ள தந்தி , இந்த தகவலை பிரகாஷ் ராஜ் மறுத்துள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது போலி செய்தியை போடுவதும் நாமே. அந்த செய்தி போலியானது என போடுவதும் நாமே.
ஆனால் மன்னிப்பு மட்டும் கேட்கமாட்டோம்...
அத விட்டுதள்ளுங்க.... தான் அவ்வாறு கூறவில்லை என்று பிரகாஷ் ராஜ் அறிவித்தும் ”பிரகாஷ்ராஜின் இந்த கருத்துக்கு” என்று குறிப்பிடுவது எல்லாம் என்ன டிசைனோ...
@i_Soruba
'நீ ரொம்ப ஒழுங்கா' எனக்கேட்பவர் கடந்து விடுகிறார். நமக்குதான் முன்ஜென்மத்தவறுகள் வரை ஞாபகம் வந்து தொலைக்கிறது.
@கருப்பு கருணா
ஆன்மீக அரசியலறிஞர் ரஜினி, ராமகிருஷ்ணர் மடத்து சாமியார்கிட்ட ஆசி வாங்கறச்சே..பக்கத்துல இருந்த ஒரு உதவிச்சாமி..அரசியல்ல ஆன்மீகம் இருக்கணும்ன்னு ஓப்பனா சொல்லியிருக்கார்..அந்த சோகால்டு செக்யூலரிசம் இல்ல..என்று புளி போட்டு விளக்க..மடத்துச்சாமி சிரிக்க...ஆன்மீக அறிஞர் தலையாட்டி ஆமோதிக்கிறார்.
இவருதான் மட்டைக்கு மூனா கிழிக்கப்போறவரு..
@வாசுகி பாஸ்கர்
மோடி இன்னுமொரு பத்து வருடம் ஆட்சி செய்தால் ஆசிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு மருத்துவத்திற்கு வருகிறவர்களின் வருகை நின்று விடும்.
பெரும் சீரழிவு பாதையை நோக்கி அரசு மருத்துவ துறையை இட்டுச்செல்கிறது.
“விநாயகருக்கு யானை தலையை பொருத்தி நம் முன்னோர்கள் உருப்புமாற்று சிகிச்சை செய்தவர்கள்” என்று பேசிய மோடியிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்?
-லாக் ஆஃப்