மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

மகாராஷ்டிராவில் வன்முறை: 144 தடை உத்தரவு!

மகாராஷ்டிராவில் வன்முறை: 144 தடை உத்தரவு!

மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற வன்முறையால் அங்கு பெரும்பாலான பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உயர் சாதியினருக்கு எதிராக மஹர் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நடத்திய போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு வெற்றி தினம், பீமா கோரேகான், பாபல் மற்றும் ஷிக்ராபூர் ஆகிய பகுதிகளில் நேற்று (ஜனவரி 1) கொண்டாடப்பட்டது.

அப்போது தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ராகுல் ஃபெடங்கல்(28) என்ற இளைஞர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் வன்முறையில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், இன்று மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. தொடர்ந்து பதற்றம் நிலவியதால் மும்பை நகரில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மின்சார ரயில் போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்டது. அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமூக விரோதிகளை ஒடுக்க அரசு முன் வர வேண்டும், நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “ வன்முறை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். உயிரிழந்த ராகுலின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 2 ஜன 2018