மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

கிரண் பேடிக்கு நாராயணசாமி திடீர் பாராட்டு!

கிரண் பேடிக்கு நாராயணசாமி திடீர் பாராட்டு!

ஆங்கிலப் புத்தாண்டை எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் கொண்டாட துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்றது முதல், ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கும், அவருக்கும் இடையில் பனிப்போர் நிலவிவருகிறது. "புதுச்சேரிக்கு கிரண் பேடி ஆளுநரா அல்லது எதிர்க்கட்சித் தலைவரா என்று தெரியவில்லை" என்று புதுவை முதல்வர் நாராயணசாமி சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நான் என்னுடைய கடமையைத்தான் செய்கிறேன் என்று கிரண் பேடி எதிர்வினையாற்றினார்.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 2) புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, ஆளுநருக்கு திடீரென பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

"நடைபெற்று முடிந்த ஆங்கிலப் புத்தாண்டை சுற்றுலாப் பயணிகளும் புதுச்சேரி மக்களும் மிகுந்த பாதுகாப்போடு கொண்டாடினார்கள். அந்த அளவுக்குக் காவல் துறையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக, துணைநிலை ஆளுநர் கிரண் பேடி எங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். அவருடன் கருத்து வேறுபாடு இருந்தாலும், தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் அவருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார் நாராயணசாமி.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

செவ்வாய் 2 ஜன 2018