மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

Time's Up: ஹாலிவுட் நடிகைகளின் அழைப்பு!

Time's Up: ஹாலிவுட் நடிகைகளின் அழைப்பு!

2017ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் குறித்து வைக்கவேண்டிய மிக முக்கியமான வருடம். ஹாலிவுட் திரையுலகில் வாய்ப்பு கொடுப்பதற்காக கலைஞர்கள்; முக்கியமாக பெண்கள் கட்டிலுக்கு அழைக்கப்படும் கலாச்சாரத்தை அடித்து உடைத்த Metoo ஹேஷ்டேக் உருவான வருடம் 2017. சாதாரண ஒரு பிரேக்கிங் நியூஸாக இல்லாமல், ஹாலிவுட் வரலாற்றையே பிரேக் செய்த திருப்புமுனையாக இந்த சம்பவத்தை மாற்ற ஹாலிவுட்டில் பணிபுரியும் நடிகைகள் அனைவரும் ஒன்றிணைந்து Time's Up என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கின்றனர்.

தற்போது வரை 300 நடிகைகளுக்கும் மேலாக இணைந்திருக்கும் இந்த அமைப்புக்கு, இதுவரையில் 13 மில்லியன் டாலர் நிதியாக வழங்கப்பட்டிருக்கிறது. “அமைதியாக இருந்த காலமெல்லாம் முடிந்துவிட்டது. இனி எதிர்த்துப் பேசவேண்டிய காலம். திரையுலகில் இருக்கும் வக்கிரவாதிகளை அடையாளம் காட்டுவது எங்கள் வேலையாக இருக்கும். அத்துடன் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, அதற்கு நியாயம் கேட்கவேண்டும் என்று விருப்பமிருந்தாலும் சட்ட ரீதியாக முயற்சி எடுக்கப் போதுமான பணபலம் இல்லாததாலேயே பல பாலியல் தொந்தரவுகள் மூடி மறைக்கப்படுகின்றன. எங்களில் பலருக்கும் தொடக்க காலத்தில் அந்த பிரச்சினை இருந்தது. அப்படி எந்தவொரு குற்றவாளியும் தப்பித்துவிடக்கூடாது என்பதற்காகவே பாலியல் ரீதியாக பாதிக்கப்படுபவர்களுக்கான வழக்கு செலவை Time's Up அமைப்பு ஏற்றுக்கொள்கிறது” என்று ஹார்வே வெய்ன்ஸ்டீனின் முகமூடியைக் கிழிக்க உதவியாக இருந்த நியூ யார்க் டைம்ஸ் இதழில் விளம்பரம் கொடுத்திருக்கிறது இந்த அமைப்பு.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 2 ஜன 2018