மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

அதிபர் ஆட்சிக்கு முயலும் மத்திய அரசு!

அதிபர் ஆட்சிக்கு முயலும் மத்திய அரசு!

மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக அதிபர் ஆட்சிக்கு மத்திய அரசு முயற்சிப்பதாக டிடிவி தினகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் சுவாமிமலையில் இன்று (ஜனவரி 2) செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன். இந்தியாவில் உள்ள மாநிலங்களைத் தன் அதிகார வரம்பிற்குள் கொண்டுவந்து, அதிபர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முயல்வதாகக் குற்றஞ்சாட்டினார்.

“ஆளுநர் தன்னிச்சையாக ஆய்வு செய்வது நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு முதன்முறையாகத் தமிழகத்தில் நிகழ்கிறது. இதற்குக் காரணம், யார் எப்படிப் போனால் என்ன நாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என முதல்வர், துணை முதல்வர் இருப்பதுதான். சொந்த தொகுதியிலேயே அடுத்த தேர்தலில் அவர்கள் ஜெயிக்க முடியாது. மக்கள் விரும்பாத ஆட்சி வெகு விரைவில் தமிழகத்தில் இருந்து இல்லாமல் போகும். மாநில அரசுகளைப் பலவீனப்படுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள மாநிலங்களைத் தன் அதிகார வரம்பிற்குள் கொண்டு வந்து, அதிபர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முயல்கிறது. மாநிலத்தில் சுயாட்சி. மத்தியில் கூட்டாட்சி என்பதே திராவிடக் கொள்கை ” என்று தெரிவித்தார்.

கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சினைகள் குறித்துச் சட்டப்பேரவையில் பேசப்போவதாகவும், ஆர்.கே.நகர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்சினைகளைச் சட்டப்பேரவையில் எடுத்துரைப்பேன் என்றும் அவர் கூறினார்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

செவ்வாய் 2 ஜன 2018