மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

கார்த்திக் சிதம்பரத்துக்கு சம்மன்!

கார்த்திக் சிதம்பரத்துக்கு சம்மன்!

அந்நிய முதலீட்டுக்கான அனுமதி பெற்றுத்தந்த புகாரில் வருகிற ஜனவரி 11 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென்று கார்த்திக் சிதம்பரத்திற்கு மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டுக்கான அனுமதி பெற்றுத்தந்ததில் முறைகேடு என்ற புகாரின் அடிப்படையில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் மீது கடந்த ஆண்டு (2017) சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில் வழக்கு தொடர்பாக வரும் ஜனவரி 11 க்குள் நேரில் ஆஜராகுமாறு மத்திய அமலாக்கத்துறை கார்த்திக் சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது.

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஷீனா பேரா கொலை வழக்கில் தொடர்புடைய இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜிக்கு சொந்தமான ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு நிதி பெற அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனத்திடம் அனுமதி பெறுவதில் முறைகேடு நடந்தது என்றும் இந்த முறைகேட்டில் விதிகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டில் இருந்து நிதி பெற உதவியதாகக் கூறி கார்த்திக் சிதம்பரத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது.

ஆரம்பம் முதலே மத்திய புலனாய்வுத்துறை இந்த வாழ்க்கை விசாரித்து வந்தது. கார்த்திக் சிதம்பரம் வழக்கு விசாரணையில் இருந்து தப்பித்து வெளிநாடு சென்றுவிடாமல் இருக்க கடந்த நவம்பரில் (2017) அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கார்த்திக் சிதம்பரம் தனது மகனை லண்டனில் உள்ள பள்ளியில் சேர்க்க வேண்டும், அதற்காக தனக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அனுமதி பெற்றார்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

செவ்வாய் 2 ஜன 2018