மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

சில்லறைப் பணவீக்கம் உயர்வு!

சில்லறைப் பணவீக்கம் உயர்வு!

தொழில்துறை ஊழியர்களுக்கான சில்லறைப் பணவீக்கம் கடந்த ஆண்டு நவம்பரில் 3.97சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’உணவுப் பொருட்களின் விலை, மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை 2017ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதால் தொழில்துறை ஊழியர்களுக்கான சில்லறைப் பணவீக்கம் 3.97 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய மாதமான அக்டோபரில் சில்லறைப் பணவீக்கம் 3.24 சதவிகிதமாக இருந்தது. ஒரு ஆண்டுக்கு முன்பு 2016ஆம் ஆண்டு நவம்பரில் தொழில்துறை ஊழியர்களுக்கான சில்லறைப் பணவீக்கம் 2.59 சதவிகிதமாக இருந்தது. 2017ஆம் ஆண்டு நவம்பரில் உணவுப் பணவீக்கம் 3.91 சதவிகிதமாக இருந்தது. இதற்கு முந்தைய மாதமான அக்டோபரில் உணவுப் பணவீக்கம் 2.26 சதவிகிதமாக இருந்தது. 2016ஆம் ஆண்டு நவம்பரில் உணவுப் பணவீக்கம் 1.66 சதவிகிதமாக மட்டுமே இருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 2 ஜன 2018