மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

மன்னிப்பு கேட்ட மோகன்ராஜா

மன்னிப்பு கேட்ட மோகன்ராஜா

வேலைக்காரன் படத்தில் தனது காட்சிகள் குறைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்திருந்த சினேகாவிடம் இயக்குநர் மோகன் ராஜா மன்னிப்பு கேட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன், ஃபகத் ஃபாசில், நயன்தாரா நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் சினேகா நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் இடம் பற்றிய காட்சிகள் குறைக்கப்பட்டதற்காக வருத்தம் தெரிவித்திருந்தார். ‘‘என்னுடைய காட்சிகள் மொத்தம் 18 நாட்கள் படமாக்கப்பட்டது. என்னுடைய கேரக்டருக்காக நான் 7 கிலோ உடல் எடை குறைத்தேன். ஆனால், படத்தில் என்னுடைய காட்சி வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனால் எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது’’ என்று சினேகா கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மோகன்ராஜா, " நான் இயக்கிய ‘வேலைக்காரன்’ படத்தில் சினேகாவின் கேரக்டர் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. ஏனென்றால், சினேகாவின் கேரக்டர் படத்தில் அவ்வளவு முக்கியமானது. சினேகா நடித்திருக்கும் காட்சிகள், படத்தின் நீளம் கருதியே துண்டிக்கப்பட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஒருவேளை நான் தவறு செய்திருப்பதாக சினேகா கருதினால், அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

செவ்வாய் 2 ஜன 2018