மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

சாலைகளில் கால்நடைகள்: உரிமையாளருக்கு அபராதம்!

சாலைகளில் கால்நடைகள்: உரிமையாளருக்கு அபராதம்!

சென்னையில், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இது குறித்துக் கடந்த நவம்பர் மாதத்தில் சிறப்பு மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. அதில், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய அபராதத் தொகை விதிக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து வைத்து அவற்றின் காதுகளில் சீரியல் எண்களுடன் கூடிய டோக்கன் ஒட்டப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். பராமரிப்புச் செலவுக்கென 750 ரூபாயும் வசூலிக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அதே கால்நடைகள் சாலைகளில் திரிந்து இரண்டாவது முறையாகப் பிடிபட்டால், உரிமையாளர்களுக்குக் கால்நடை திருப்பிக் கொடுக்கப்படாது. அதற்குப் பதிலாக புளூகிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படும்.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

செவ்வாய் 2 ஜன 2018