மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

சூர்யா படத்திற்குப் பிரச்சினையில்லை!

சூர்யா படத்திற்குப் பிரச்சினையில்லை!

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவரவுள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தணிக்கை விவரம் வெளியாகியுள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவிருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன், படத்தை முடிப்பதற்கான வேலைகளில் தீவிரம் காட்டினார். படப்பிடிப்பை முடித்ததோடு இறுதிக்கட்ட பணிகளையும் முடித்துவிட்ட விக்னேஷ் சிவன் தணிக்கைக்காக இன்று லீ மேஜிக் லேண்டர்ன் அலுவலகம் முன்பு காத்திருந்தார். எப்படியும் தணிக்கையில் `யு’ சான்றிதழ் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்தவருக்கு, குழந்தைகள் தங்களின் பெற்றோர்களின் துணையுடன் படத்தை பார்க்கக் கூடிய யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தச் செய்தி வெளியானதும் சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

செந்தில், கார்த்திக், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நானா தானா, சொடக்கு மேல, பீலா பீலா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன. பொங்கல் தினக் கொண்டாட்டமாக வெளிவரவிருக்கும் இப்படத்தின் முழுப்பாடலையும் நாளை (ஜனவரி 3) வெளியிட உள்ளனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 2 ஜன 2018