மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

படிக்கட்டில் பயணம்: பாஸ் ரத்து!

படிக்கட்டில் பயணம்: பாஸ் ரத்து!

ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களின் பாஸ் ரத்து செய்யப்படும் எனத் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 300க்கும் அதிகமான மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில், நாளொன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயணிக்கின்றனர்.

பலரும் பாதுகாப்பாகக் கருதும் இந்த பயணத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பற்றதாக மாற்றுகின்றனர். இது அவர்களுக்கு மட்டுமல்லாமல், மற்ற பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில்,தெற்கு ரயில்வே துறை புதிய நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து சென்னை கோட்ட பாதுகாப்பு மூத்த ஆணையர் லூயிஸ் அமுதன், “2017ஆம் ஆண்டில் மட்டும் படிகளில் பயணம் செய்ததற்காக சுமார் 7 ஆயிரத்து 627 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரயில் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் மாணவர்களின் பாஸ் ரத்து செய்யப்படும். மேலும், படியில் பயணம் செய்யும் காட்சியை வீடியோ எடுத்து, சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் மீது கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 2 ஜன 2018