மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

உடல் எடை குறைக்கப் புதிய முறை!

உடல் எடை குறைக்கப் புதிய முறை!

உடல் எடை அதிகம் உள்ள நபர்கள் தங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புச் சத்துக்களை நீக்கம் செய்யப் புதிய முறையை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.

உடல் எடை அதிகரித்துவிடுவதால் அவதிப்படும் நபர்கள் பலர் மருத்துவர்களை நாடி, தேவையற்ற கொழுப்புச் சத்துக்களைக் குறைக்கும் ஆலோசனைகளைப் பெற்றுவருவது வழக்கம். உடற்பயிற்சி மூலமும் சிலர் தேவையற்ற கொழுப்புச் சத்துக்களை நீக்கம் செய்ய முயற்சி செய்கின்றனர். மாத்திரைகளை உட்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளைக் கருத்தில் கொண்டு பலர் மருந்துகளை தவிர்த்துவருகின்றனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த நன்யாங் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்காகப் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை கண்டறிந்துள்ளனர். உடலில் ஒட்டிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான கருவி இது. இதை இணைத்துக்கொள்ளும் நபரின் உடலில் ஒருவிதமான ரசாயனத்தைச் செலுத்தி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புச் சத்துக்களைக் குறைக்க உதவுகிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 4 வாரத்திற்குள் 30 சதவிகிதக் கொழுப்புச் சத்துக்களைக் குறைக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர். இந்தக் கருவியை எலிகளின் உடலில் பரிசோதனை செய்து வெற்றிகண்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 2 ஜன 2018