மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

மெட்ரோ இயக்குநருடன் அசோக் செல்வன்

மெட்ரோ இயக்குநருடன் அசோக் செல்வன்

மெட்ரோ திரைப்படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கி வரும் புதிய திரைப்படம் குறித்த தகவலை நேற்று (ஜனவரி 1) வெளியிட்டார்.

மெட்ரோ திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்கு முன்னர் 2014ஆம் ஆண்டே ‘ஆள்’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ஆனந்த கிருஷ்ணன், மெட்ரோ திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அவரது புதிய திரைப்படம் குறித்த தகவலை நேற்று புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ளார்.

அசோக் செல்வன் நடித்து, ஆனந்த கிருஷ்ணன் எழுதி இயக்கிவரும் இந்தத் திரைப்படத்துக்கு ‘ஆக்சிஜன்’ என்று பெயரிட்டுள்ளார். இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. மெட்ரோ திரைப்படம் போல் இந்தத் திரைப்படமும் வித்தியாசமான கோணத்தில் இயக்கப்படுகிறது என்பது இந்த போஸ்டரை கண்டதும் தெரியவருகிறது. அதுமட்டுமின்றி அசோக் செல்வன் சமீபத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

எனவே, இந்தப் புதுமையான கூட்டணி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 2 ஜன 2018