மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

கொடைக்கானலில் குறிஞ்சிப் பூ பூத்தது!

கொடைக்கானலில் குறிஞ்சிப் பூ பூத்தது!

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூ தற்போது கொடைக்கானலில் பூக்கத் தொடங்கி உள்ளது.

இந்த குறிஞ்சி பூக்கள் கொடைக்கானல், நீலகிரி, ஏற்காடு போன்ற மலைப் பகுதிகளில் அதிகளவில் காணப்படும். தற்போது, கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செண்பகனூர், பெருமாள்மலை போன்ற இடங்களில் குறிஞ்சி பூ பூக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் குறிஞ்சி பூக்கள் பூத்துள்ள இடங்களில் பெயர்ப் பலகை வைக்கப்படவில்லை. இதனால் அதைச் சுற்றுலாப்பயணிகள் கவனிக்காமல் செல்கின்றனர். எனவே, அங்குப் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் என்றும், குறிஞ்சி பூ செடி இருக்கும் இடத்தை சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல், ஈரோடு கருங்கல்பாளையத்தில், தங்கவேல் என்பவர், தன் வீட்டு மொட்டை மாடியில் குறிஞ்சி பூ செடியை வளர்த்து வருகிறார். தற்போது அவர் வீட்டிலும் குறிஞ்சி பூ பூத்துள்ளது. இதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 2 ஜன 2018