மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

டிராக்டர் வணிக வாகனம் ஆக்கப்படாது!

டிராக்டர் வணிக வாகனம் ஆக்கப்படாது!

விவசாய வாகனப் பிரிவிலிருந்து, டிராக்டரை வணிக வாகனப் பிரிவுக்கு மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்பிக்கள் இன்று (ஜனவரி 2) மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்தனர். அப்போது, டிராக்டர் வணிக வாகனமாக மாற்றப்படாது என்று உறுதியளித்தார் நிதின் கட்கரி.

தமிழகம் முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாய வாகனம் என்ற பிரிவின் கீழ் இவை பதிவு செய்யப்பட்டதால், தனியாக இதற்கு வரி விதிக்கப்படவில்லை. ஆனால், இந்த டிராக்டர்களை விவசாயப் பணிகள் தவிர்த்து, சிலர் வேறு பணிகளுக்கும் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் டிராக்டர்களை விவசாயப் பிரிவிலிருந்து அகற்றி, வணிகப்பிரிவு வாகனமாக மாற்றப்படுவதாகத் தகவல் வெளியானது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த முடிவால், டிராக்டர்களின் விற்பனை வெகுவாகக் குறையும் என்றும் சொல்லப்பட்டது. தமிழக எதிர்கட்சி தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின், கடந்த வாரம் இதற்கு எதிராகக் கருத்து வெளியிட்டிருந்தார். ஜிஎஸ்டி வரிவிதிப்புச் சுமையினால் டிராக்டர்களின் விலை அதிகரித்து, அதனால் விவசாயிகள் அல்லல்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்பிக்கள், நிதின் கட்கரியைச் சந்தித்து இந்த கடிதத்தினை அளித்தனர்.

டிராக்டர்களை வணிகப்பிரிவுக்கு மாற்றினால், ஜிஎஸ்டி வரியினால் அதன் விலை உயர்வதோடு, உதிரி பாகங்களின் விலையும் அதிகரிக்கும்; இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் என்று கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது, டிராக்டர்கள் விவசாய வாகனப் பிரிவில் இருந்து மாற்றப்படாது என்று திமுக எம்பிக்களிடம் நிதின் கட்கரி உறுதியளித்தார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 2 ஜன 2018