மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

இந்த ஆண்டு ரூ.36 கோடி அதிகம்!

இந்த ஆண்டு ரூ.36 கோடி அதிகம்!

தமிழகத்தில் இந்த ஆண்டு புத்தாண்டிற்கு ரூ. 211 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 36 கோடி அதிகம்.

2017ஆம் ஆண்டின் புத்தாண்டுக்கு ரூ.175 கோடிக்கு மது விற்பனையானது. டிசம்பர் 31ஆம் தேதி மற்றும் புத்தாண்டுக்கு ரூ.200 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகத்தினர் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

டிசம்பர் 31ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மது விற்பனை ஆரம்பித்தது. டிசம்பர் 31ஆம் தேதியில் ரூ.117 கோடிக்கும், ஜனவரி 1ஆம் தேதியில் ரூ.94 கோடிக்கும் மது விற்பனையானது. இந்த இரு தினங்களில் ரூ.211 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.அது கடந்த ஆண்டை விட ரூ.36 கோடி அதிகம் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு மதுபானங்களின் விலை 10 முதல் 12 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 2 ஜன 2018