மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

தலைமையாசிரியர் கலந்தாய்வு : உயர் நீதிமன்றம் தடை!

தலைமையாசிரியர் கலந்தாய்வு : உயர் நீதிமன்றம் தடை!

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு நடத்த மதுரை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 2) இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள், பணி மூப்பு அடையும் முன்பே தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டதால், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் மீதான விசாரணையில் மதுரை உயர் நீதிமன்ற கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு வழங்க நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த 4 ஆண்டுகளாக 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறவுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரியத் தேர்வுக்கான பணிகளைச் செய்ய உரிய வழிகாட்டுதல் இல்லாமல் 9,000 உயர்நிலைப் பள்ளிகள் திணறி வருகின்றன. எனவே, மாணவர் நலன், கற்பித்தல் பணி, தேர்ச்சி சதவிகிதத்தை கவனத்திற்கொண்டு, பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியல் தயாரித்து அனைத்துப் பணியிடங்களையும் கலந்தாய்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதைத் தொடர்ந்து, அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 2 ஜன 2018