மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்!

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்!

புத்தாண்டுப் பரிசாக, விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டுமென்று பல மாநிலங்களில் கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. சில மாநிலங்களில் விவசாயத் தேவைகளுக்காக 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டு தொடக்கம் முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ். இந்த முயற்சி ஒரு அற்புதமான வெற்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தேர்தல் வாக்குறுதியில் இலவச மின்சாரம் பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை; இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக உறுதி தரப்படவில்லை. ஆனாலும், விவசாயிகளின் துயரத்தைத் துடைக்கும் பொருட்டு, 24 மணி நேர இலவச மின்சாரம் வழங்க முடிவெடுக்கப்பட்டது” என்றிருக்கிறார் சந்திரசேகர ராவ்.

இதனால், தெலங்கானாவிலுள்ள 23 லட்சத்துக்கும் அதிகமான பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்குமென்றும், அம்மாநிலத்தின் மின்சாரத் தேவை வரும் மார்ச் மாதத்திலிருந்து 11 ஆயிரம் மெகாவாட்டாக இருக்குமென்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடுதல் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய, ரூ.12,610 கோடியில் புதிய மின் வழித்தடங்கள், ட்ரான்ஸ்பார்மர்கள் மற்றும் துணைமின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இலவச மின்சாரம் வழங்கப்படாததால், இது ஒரு புரட்சி என்று பெருமைப்படுகின்றனர் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர். ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

“நிலத்தடி நீர் இல்லாத நிலையில், இலவச மின்சாரத்தினால் என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது. இந்தத் திட்டத்தினால் மின்சார முறைகேடுகள் நடைபெறும் என்றும், பெருவிவசாயிகள் மட்டுமே பயன்பெறுவார்கள் என்றும், நிலத்தடி நீர்வளம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 2 ஜன 2018