மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

உள்கட்டுமானத் துறை 6.8% வளர்ச்சி!

உள்கட்டுமானத் துறை 6.8% வளர்ச்சி!

சிமென்ட் மற்றும் ஸ்டீல் உற்பத்தி அதிகரித்ததின் விளைவாக நவம்பர் மாதத்தில் இந்தியாவின் உள்கட்டுமானத் துறை 6.8 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2017ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் சிமென்ட் உற்பத்தி 1.3 சதவிகிதமும், ஸ்டீல் உற்பத்தி 8.4 சதவிகிதமும் உயர்ந்திருந்தது. இந்த நிலையில் 2017ஆம் ஆண்டின் நவம்பரில் சிமென்ட் உற்பத்தி 17.3 சதவிகிதமும், ஸ்டீல் உற்பத்தி 16.6 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. நிலக்கரியைப் பொறுத்தவரையில், அக்டோபர் மாதத்தில் 3.9 சதவிகித உயர்வைச் சந்தித்திருந்த நிலக்கரி உற்பத்தியானது நவம்பர் மாதத்தில் 0.2 சதவிகித சரிவைச் சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 0.2 சதவிகிதமும், மின்சார உற்பத்தி 1.9 சதவிகிதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 2.4 சதவிகிதமும், உர உற்பத்தி 0.3 சதவிகிதமும் உயர்ந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருள்கள், உரம், ஸ்டீல், மின்சாரம் மற்றும் சிமென்ட் ஆகிய எட்டு துறைகளும் இந்தியாவின் முன்னணி உள்கட்டுமானத் துறைகளாகும். இவை இந்தியாவின் ஒட்டுமொத்தத் தொழில் துறை உற்பத்தியில் சுமார் 40.27 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ளன. இந்த எட்டு துறைகளும் நவம்பர் மாதத்தில் 6.8 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றன. இதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில் இத்துறைகள் 5 சதவிகித வளர்ச்சியை மட்டுமே கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 2 ஜன 2018