மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

‘மக்களின் ஆளுநர்’ பன்வாரிலால்!

‘மக்களின் ஆளுநர்’ பன்வாரிலால்!

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இன்று (ஜனவரி 2) எம்.ஜி.ஆர் . சிலையைத் திறந்து வைக்க வந்த தமிழக ஆளுநருக்கு திமுகவினர் கறுப்புக் கொடி காட்டினர். ஆனால், தமிழக ஆளுநரை, ‘மக்களின் ஆளுநர்’ என்று அழைத்து பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

நேற்றே தஞ்சை வந்துவிட்ட தமிழக ஆளுநர் இன்று தமிழ்ப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தமிழக ஆளுநர் மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதைக் கண்டித்து திமுக கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் அறிவித்தது. அதன்படி இன்று காலை தஞ்சைப் பேருந்து நிலையம் அருகே தடுப்புகள் அமைத்து அதற்குள் நின்று ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்ட போலீஸார் அனுமதி அளித்தனர். அதன்படி திமுகவினர் கறுப்புக் கொடி காட்டினர்.

இந்நிலையில் தமிழ்ப் பல்கலைக்கழக விழாவில் ஆளுநரோடு அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், உள்ளூர் அதிமுக தலைவரும் தமிழக அமைச்சருமான துரைக்கண்ணுவும் கலந்துகொண்டனர். அந்த விழாவில் பேசிய மாஃபா பாண்டியராஜன், “ஆரஞ்சு விளையும் நாக்பூரிலிருந்து தமிழகத்துக்கு வந்திருக்கும் மக்களின் ஆளுநர் அவர்களே” என்று பன்வாரிலால் புரோகித்துக்குப் புது அடைமொழியைச் சூட்டி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதல்வராகத் தொடர முடியாத நிலை ஏற்பட்டபோது ஓ.பன்னீரை முதல்வர் ஆக்கினார். அப்போது அதிமுகவினர் ஜெயலலிதாவை, ‘மக்களின் முதல்வர்’ என்று அழைத்தனர். அதாவது முதல்வராக பன்னீர் இருந்தபோதும் அதிகாரம் எல்லாம் ஜெயலலிதாவிடமே இருப்பதை இவ்வாறு அழைத்து உறுதிப்படுத்தினர் அதிமுகவினர்.

அதேபோல இன்று தமிழக ஆளுநரை மக்களின் ஆளுநர் என்று அமைச்சர் அழைத்தது, ‘அதிகாரம் எல்லாம் ஆளுநரிடம் இருப்பதை தமிழக அரசே ஒப்புக் கொண்டது போல ஆகிறது’ என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் தஞ்சை சுற்றுலா மாளிகையில் ஆளுநர் மக்களிடம் மனு வாங்குகிறார். அப்போது பெ. மணியரசன் தலைமையிலான தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைமையில் சுற்றுலா மாளிகையை முற்றுகையிட அந்த இயக்கத்தினர் தயாராகிவருகின்றனர்.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

செவ்வாய் 2 ஜன 2018