மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

மீண்டும் விஜய் - ரஹ்மான் கூட்டணி!

மீண்டும் விஜய் - ரஹ்மான் கூட்டணி!

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இவர்கள் கூட்டணியில் வெளியான துப்பாக்கி, கத்தி ஆகிய இரு படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. இதனால் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்தே எதிர்பார்ப்பு அதிகமானது. இதை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும், டி.சந்தானம் கலை இயக்குநராகவும் பணியாற்றவுள்ளனர். இதன் ஆரம்பகட்டப் பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 2 ஜன 2018