மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

ராமகிருஷ்ணா மடத்தில் ரஜினி

ராமகிருஷ்ணா  மடத்தில் ரஜினி

அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், புத்தாண்டு தினத்தில் ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்று ஆன்மிக குரு கெளதமானந்தாஜி மகராஜை சந்தித்து ஆசி பெற்றார்.

2017ஆம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்று தனது ரசிகர்கள் முன் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாகவும் சாதி, மதச் சார்பற்ற ஓர் ஆன்மிக அரசியலைக் கொண்டுவர வேண்டும், அதுதான் தன்னுடைய நோக்கம் என்றும் கூறியிருந்தார்.

தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக நேற்று ரஜினி மன்றம் என்ற பெயரில் செயலியும், இணையப் பக்கத்தையும் தொடங்கி வைத்தார். அதில் மன்றத்தில் உறுப்பினர்களும், உறுப்பினர் அல்லாதோரும் மற்றும் மாற்றத்தை விரும்பும் அனைவரும் இணையலாம் என்றும் அதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ட்விட்டர் பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது.

ரஜினி மன்றத்தின் வலைதளப் பக்கத்தில் பாபா முத்திரையும், அதனைச் சுற்றி நாகப்பாம்பு இருப்பது போன்றும் இடம்பெற்றுள்ளது.

ரஜினி மன்றம் மற்றும் ராமகிருஷ்ண மடத்தின் லோகோ ஓன்றுபோல இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்று (ஜனவரி 1) சென்னை மயிலாப்பூரிலுள்ள ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று அங்கு ஆன்மீகத் தலைவர் கெளதமானந்தாஜி மகராஜ், மடத்தின் மேலாளர் விமூர்த்தானந்தர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர், மூத்த துறவிகளையும் சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு கெளதமானந்தா சில அறிவுரைகளையும் வழங்கினார்.

இது வழக்கமான ஒரு சந்திப்புதான் என்று ராமகிருஷ்ணா மடத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், ரஜினிகாந்த் மடத்தின் மேலாளர் அறையில் காத்திருந்ததாகவும், அங்கு வந்த கெளதமானந்தாவிடம் ரஜினி ஆசி பெற்றதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 2 ஜன 2018