மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

புத்தாண்டில் பூஜையுடன் தொடங்கிய சூர்யா

புத்தாண்டில் பூஜையுடன் தொடங்கிய சூர்யா

சூர்யா, செல்வராகவன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று (ஜனவரி 1) நடைபெற்றது.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விக்னேஷ் சிவனின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. இதனையடுத்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார்.

இதன் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளது. இதை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

படப்பிடிப்பு வருகிற ஜனவரி 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் டைட்டில், துணை நடிகர்கள் மற்றும் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 2 ஜன 2018