மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

சசிகலா ஆஜராக மாட்டார்!

சசிகலா ஆஜராக மாட்டார்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு சசிகலா ஆஜராக மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், இதனை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இதையடுத்து அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விசாரணை நடத்திவருகிறது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் திமுக மருத்துவரணி நிர்வாகி சரவணன், தீபா, மாதவன், தீபக் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கிய விசாரணையில், இன்று (ஜனவரி 2) சேப்பாக்கம் கலச மகாலில் உள்ள விசாரணை ஆணையத்தின் முன்பு இளவரசி மகள் கிருஷ்ணப் பிரியா ஆஜராகி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விளக்கம் அளித்தார். கிருஷ்ணப் பிரியா ஆஜராகியுள்ள நிலையில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவும் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க பெங்களூரு சிறையிலுள்ள சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த தகவலை சசிகலாவுக்கு சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆணையத்துக்கு இ.மெயிலில் தனது பதிலை அனுப்பிய சசிகலா, சம்மன் பிரதி தனக்கு நேரில் கிடைத்த பிறகு விளக்கம் அளிப்பேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சசிகலா விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராக மாட்டார் என்ற கூறப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார். வரும் 8ஆம் தேதிக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை தினகரன் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 2 ஜன 2018