மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

தினகரன் ஆதரவாளர்கள் பதவி பறிப்பு!

தினகரன் ஆதரவாளர்கள் பதவி பறிப்பு!

அதிமுக கட்சியில் இருந்த தினகரன் ஆதரவாளர்கள் 9 பேரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வியையடுத்து அதிமுகவில் உள்ள தினகரன் ஆதரவாளர்களைக் களையெடுக்கும் பணியை ஓ.பி.எஸ் மற்றும் ஈபிஎஸ் தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக, வி.பி.கலைராஜன், புகழேந்தி ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டன. அடுத்த சில நாட்களில், கட்சியில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது காஞ்சிபுரம், வேலூர், கடலூர், தேனி , விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 9 பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கோதண்டபாணி , வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணிப் பொருளாளர் ஜெயந்தி பத்மநாபன், விருத்தாசலம் நகர செயலாளர் வி.டி.கலைச்செல்வன், தேனி மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவர் கதிர்காமு, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி. சுப்பிரமணியன். சிவகங்கை மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் மாரியப்பன், ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் முத்தையா, தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் சுந்தரராஜ், விளாத்திகுள ஒன்றிய இணைச் செயலாளர் உமாமகேஸ்வரி ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் 8 பேர் தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் ஆவர். வி.டி. கலைச்செல்வன் டிடிவி ஆதரவு எம்எல்ஏவாக உள்ளார். இவர்களின் பதவி பறிக்கப்பட்ட போதிலும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களை நீக்கினால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்பதால் அவர்களது பதவிகள் மட்டுமே பறிக்கப்படுகின்றன. ஏனைய தினகரன் ஆதரவாளர்களின் பதவிகள் பறிக்கப்படுவதுடன் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டு வருகின்றனர்.

முன்னதாக, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை முடிந்தால் கட்சியில் இருந்து நீக்குங்கள் எனத் தங்க தமிழ்ச்செல்வன் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோருக்குச் சவால் விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

செவ்வாய் 2 ஜன 2018