மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்க ஆலோசனை!

ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்க ஆலோசனை!

இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்த ஆலோசனை மேற்கொள்ள, வர்த்தக மேம்பாட்டு கவுன்சிலின் மூன்றாவது கூட்டம் ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’வர்த்தக மேம்பாட்டு கவுன்சிலின் மூன்றாவது கூட்டம் ஜனவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய மாநில அரசுகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்று இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து விவாதிக்கவுள்ளனர். இந்தக் குழுவின் முந்தைய கூட்டம் 2017ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்றது. அதேசமயம் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் தர நிர்ணயங்களை அதிகரிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதங்கள் நடைபெறும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இக்கூட்டம் குறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு தலைவர் கணேஷ் குப்தா கூறுகையில், "ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் ஏற்றுமதி மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான சிக்கல்கள் அதிகரித்துள்ளன. சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் ஜிஎஸ்டியில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளன. அதற்கான தீர்வுகள் தேவைப்படுகின்றன. சர்வதேசச் சந்தைகளில் இந்தியப் பொருட்களின் போட்டியை அதிகரிக்க இந்திய உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மிகவும் முக்கியமாக உள்ளது" என்றார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 2 ஜன 2018