மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

இந்தியாவின் கருத்தை வெளிப்படுத்திய ட்ரம்ப்

இந்தியாவின் கருத்தை வெளிப்படுத்திய ட்ரம்ப்

புத்தாண்டு அன்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த கருத்தை, தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்போதெல்லாம் இந்தியா வலியுறுத்தி வருவதாகக் கூறியிருக்கிறார் இந்திய உள்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.

புத்தாண்டு நாளன்று (ஜனவரி 1) அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட ட்வீட்டில், பாகிஸ்தான் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தது. கடந்த 15 ஆண்டுகளாக 33 பில்லியன் டாலர்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய அமெரிக்க தலைவர்களை, அந்நாடு முட்டாள்களாக நினைத்துவிட்டது என்று அதில் குறிப்பிட்டிருந்தார் ட்ரம்ப். உதவிகளைப் பெற்றுவிட்டு, பொய்களையும் வஞ்சகத்தையும் பாகிஸ்தான் திருப்பித் தருவதாகவும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தேடும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய உள்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ”தீவிரவாதம் மற்றும் அதனை ஊக்குவிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் பற்றி இந்தியா இதுநாள்வரை கொண்டிருந்த நிலைப்பாட்டை, ட்ரம்ப் நிர்வாகம் தனது முடிவாகத் தெரிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் கூட்டு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருவதை பல நாடுகள் புரிந்து கொண்டுள்ளன. தீவிரவாதத்தில் நல்லது, கெட்டது என்ற பிரிவுகள் இருக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

ட்ரம்ப் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், பாகிஸ்தானுக்கு வழங்கப்படவிருந்த 255 மில்லியன் டாலர் ராணுவ உதவிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. இஸ்லாமாபாத்தின் எதிர்கால முடிவுகளைப் பொறுத்தே, இந்த விஷயத்தில் மேற்கொண்டு முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் க்வாஜா ஆசிப், “அமெரிக்காவிடம் பெற்ற உதவிகள் குறித்து விவரம் வெளியிட, பாகிஸ்தான் தயாராக உள்ளது” என்று கூறியிருந்தார். நிறைய உதவிகள் செய்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டதற்கு, அவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

செவ்வாய் 2 ஜன 2018