மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

ரஜினி வருகை: பிரேமலதா கருத்து!

ரஜினி வருகை: பிரேமலதா கருத்து!

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; ஆனால் வெல்லப்போவது யார் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தேமுதிக சார்பில் இன்று ஜனவரி 2ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக தேமுதிக மகளிர் அணிச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து சேர்ந்தார். அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓகி புயலால் 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் தமிழக அரசு தவறான தகவலைத் தெரிவித்துவருகிறது. தற்போது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது” என்று வேதனை தெரிவித்தார்.

ரஜினியின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “ஓட்டுப்போடும் தகுதியுள்ளவர்கள், குற்ற வழக்குகள் இல்லாதவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், வந்து ஜெயிக்கப்போவது யார் என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். ஜனநாயக ரீதியாக யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்” என்று குறிப்பிட்டார்.

திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாகவும் பிரேமலதா கூறினார். “50 ஆண்டுகள் கழித்து ஒரு சுயேச்சை வெற்றி பெறுகிறார் என்றால் திருமங்கலத்தில் தொடங்கிய பார்முலா தமிழகம் முழுவதும் தொடர்கிறது என்பதுதான் காரணம்” என்றார் பிரேமலதா.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 2 ஜன 2018