மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது!

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது!

நாடாளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், எல்லையில் பயங்கரவாதத்தை நிறுத்தாதவரை, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாது என்று கூறியிருக்கிறார்.

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்திலுள்ள போலீஸ்படை முகாம் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நட்த்தினர். இதில் 5 போலீசார் பலியானார்கள். இதனையடுத்து, நேற்று (ஜனவரி 1) டெல்லியில் வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவின் கூட்டம் நடந்தது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்திவரும் நிலையில், காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்களை தூண்டிவருவது பற்றியும் இதில் பேசப்பட்டதாகத் தெரிகிறது. இந்த கூட்டத்தில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், சமீபத்தில் பாகிஸ்தான் அதிகாரியைச் சந்தித்தபோது சிறையில் வாடும் பெண்கள், 70 வயதைக் கடந்தவர்கள் மற்றும் மனநலம் சரியில்லாதவர்களை இரு நாடுகளும் விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை நிறுத்தும் வரையில் அந்த நாட்டுடன் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாது என்று சுஷ்மா தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே பொதுவான இடத்தில் போட்டிகளை நடத்தலாம் என்ற வாதத்தையும் அவர் நிராகரித்து விட்டாராம். பயங்கரவாதமும் விளையாட்டுப் போட்டிகளும் ஒன்றாகப் பயணிக்க முடியாது என்று இதற்கு அவர் காரணம் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 2 ஜன 2018