மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

அமலுக்கு வந்த பீம் செயலி!

அமலுக்கு வந்த பீம் செயலி!

டெபிட் கார்டு மற்றும் பீம் செயலி மூலம் ரூ.2,000 வரையில் பொருள்களை வாங்கும் வர்த்தகர்களுக்கு, எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டாம் என்ற சலுகை நேற்று (ஜனவரி 1) முதல் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொருள்கள் விற்பனையில் டெபிட் கார்டு, பீம் செயலி வாயிலான பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய சலுகையை வழங்க மத்திய அரசு கடந்த வாரம் முடிவு செய்தது. அதன்படி, ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு, வங்கிகளுக்கான எம்டிஆர் கட்டணத்தை அரசே ஏற்க முடிவு செய்தது. மேலும் இச்சலுகையை இரண்டு ஆண்டுகள் வரை இலவசமாக வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜீவ் குமார் ட்விட்டரில், "டிஜிட்டல் 2018 மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. சென்ற காலாண்டில் பீம் செயலி மூலம் ரூ.13,174 கோடி பரிமாற்றம் நடந்துள்ளது. இது 86 சதவீதம் அதிகமாகும்' என்று கூறியுள்ளார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 2 ஜன 2018