மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

அதிக வெற்றிகளுடன் இந்தியா முதலிடம்!

அதிக வெற்றிகளுடன் இந்தியா முதலிடம்!

இந்திய அணி கடந்த 3 வருடங்களில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்திய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற அனைத்துத் தொடர்களிலும் வெற்றிபெற்று ஒரு வருடத்தில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணிகளின் வரிசையில் இரண்டாம் இடம் பெற்றது. ஆனால் 2015ஆம் ஆண்டு முதல் இந்திய அணி தொடர்ச்சியாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து 135 போட்டிகளில் விளையாடி 87 வெற்றிகள், 36 தோல்விகளுடன் (9 போட்டி சமன்) 64.44 சதவிகித வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இது கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு அணியால் பெறப்பட்ட அதிகபட்ச வெற்றியாகும். இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி 58 சதவிகிதத்துடன் உள்ளது. நியூசிலாந்து அணி மொத்தமாக 118 போட்டிகளில் விளையாடி 69 வெற்றிகளை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது. இதனால் இந்திய அணி டி-20 மற்றும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றுவருகிறது.

தற்போது தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றுள்ள இந்திய அணி இந்த வெற்றிப் பயணத்தைத் தொடருமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருகிறார்கள்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 2 ஜன 2018