மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

முதல்வருக்கு மூவரணி கோரிக்கை!

முதல்வருக்கு மூவரணி கோரிக்கை!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 31 ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசியபோது, ’’10 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும், 60 வயதை கடந்த கைதிகளையும் மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்வோம்’’ என்று அறிவித்தார்.

இதற்கு மனித நேய ஜனநாயகக் கட்சி தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை தனியரசு , முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

’’10 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தோம். முன்னாள் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மா அவர்களிடம் இதுப்பற்றி கூறியபோது கனிவுடன் பரிசீலிப்பதாக கூறியிருந்தார். பின் இப்போதைய முதல்வரிடமும், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகத்திடமும் அவர்களிடமும் இது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அவர்கள் இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தனர்.

இந்நிலையில்தான், திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் இதற்கான அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். கண்ணீரில் வாடிய ஆயிரக்கணக்கான குடும்பங்களிள் வாழ்வில் முதல்வர் வசந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மனிதநேயத்துடன் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு உத்தரவிட்ட முதல்வருக்கும், இதற்கு எல்லா வகையிலும் துணை நின்ற சட்டத்துறை அமைச்சர் சண்முகத்துக்கும் அவர்களுக்கும், அதிமுக அரசின் அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

சட்ட மன்றத்தில் இக்கோரிக்கைக்கு ஆதரவளித்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், களத்தில் தொடர்ந்து போராடிய தலைவர்களுக்கும், அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்ற மூவரணியினர் முதல்வரிடம் முக்கியமான ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளனர்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

செவ்வாய் 2 ஜன 2018