ஒன்பிளஸ் நிறுவனத்தின் அப்டேட்!

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒன்பிளஸ் 5T என்ற மாடலில் புதிதாக ஓரியோ அப்டேட் வெளியிட்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் விற்பனையில் கடந்த ஆண்டு அதிக ஸ்மார்ட்போன்களை விற்றுத் தீர்த்த நிறுவனம் ஒன்பிளஸ். இதன் புதிய மாடலான ஒன்பிளஸ் 5T வெளியானதும் பயனர்கள் அதிகளவில் அதனை வாங்க முற்பட்டனர். ஏனெனில் குறைந்த விலையில் பேஸ் அனலாக் போன்று சில சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த மாடல் வெளியானது. தற்போது புதிய மாடலான ஒன்பிளஸ் 6 தயாரிப்பில் ஈடுபட்டுவரும் அந்நிறுவனம் பழைய மாடலான ஒன்பிளஸ் 5T யில் ஆன்ட்ராய்டின் புதிய வெர்ஷனான 8.0 ஓரியோவை அப்டேட் செய்யும் வசதியை வழங்கி உள்ளது.