மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

இளநிலை உதவியாளர் பணி : 'கட் ஆஃப்' வெளியீடு!

இளநிலை உதவியாளர் பணி : 'கட் ஆஃப்' வெளியீடு!

தமிழ்நாடு மின் வாரியத்தில் காலியாக உள்ள, 350 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தில் 50 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதில், கள உதவியாளர், இளநிலை உதவியார் உள்ளிட்ட, 10 பதவிகளில் காலியாக உள்ள 2,175 இடங்களுக்கு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் ஊழியர்களை நியமிக்க மின் வாரியம் முடிவு செய்தது. அனைத்துப் பணியிடங்களுக்கும், 2016ஆம் ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட்வரை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், இளநிலை மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கு நேர்காணல் நடத்தவில்லை. மற்ற பதவிகளுக்கு, நேர்காணல் உட்பட அனைத்துப் பணிகளும் முடித்து, ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது, இளநிலை உதவியாளர் கணக்கு, இளநிலை உதவியாளர் நிர்வாகம் ஆகிய 350 பதவிகளுக்கு நேர்காணல் நடத்தப்படவுள்ளது.

இதற்கான எழுத்து தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களின், 'கட் ஆஃப்' மதிப்பெண் பட்டியல் http://www.tangedco.gov.in என்னும் மின் வாரியம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வாகியுள்ளவர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் முடிந்ததும் எழுத்துத் தேர்வு, நேர்காணல், கல்வித் தகுதி ஆகியவற்றில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களிலிருந்து இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 2 ஜன 2018