மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 ஜன 2018

அணுசக்தி: பட்டியலைப் பரிமாறிக்கொண்ட இந்தியா - பாக்!

அணுசக்தி: பட்டியலைப் பரிமாறிக்கொண்ட இந்தியா - பாக்!

இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தமது நாடுகளில் செயல்படும் அணுசக்தி நிலையங்கள் பட்டியலை நேற்று (ஜனவரி 1) பரிமாறிக்கொண்டன.

இதற்கான நிகழ்ச்சி இஸ்லாமாபாத் மற்றும் டெல்லியில் உள்ள தூதரகங்கள் வழியாக நேற்று நடைபெற்றதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அணுமின் நிலையங்கள் தொடர்பாக கடந்த 1988 டிசம்பர் 31இல் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஒருவரது அணுமின் நிலையங்களை மற்றவர் தாக்கக் கூடாது.

இது 1991 ஜனவரி 27இல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி அணுமின் நிலையங்கள் தொடர்பான விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி இரு நாடுகளும் பரஸ்பரம் பரிமாற்றம் செய்வது வழக்கம். முதல்தடவையாக 1992 ஜனவரி 1ஆம் தேதி பட்டியல் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதில்லை என இரு நாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் கீழ், தொடர்ந்து 27ஆவது ஆண்டாக தற்போது பட்டியல் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

செவ்வாய் 2 ஜன 2018